Skip to main content

நீதி
அந்தச் சித்திர மேழி சபை இதுபோன்ற ஒரு வழக்கைச் சந்தித்ததேயில்லை. வாய்க்கால் வரப்புத் தகராறுகளவு போன்ற வழக்குகள் வருவது உண்டு.  சில சமயம் அபூர்வமாக சொத்துத் தகராறுகள் கூட வரும். ஆனால் ஒரு கொலை வழக்குஅதுவும் இப்படிப்பட்ட கொலை வழக்கை அது இப்போதுதான் சந்திக்கிறது. கொலை செய்யப்பட்டவன் அண்ணன்செய்தவன் தம்பி. வழக்கை மன்றத்துக்குக் கொண்டுவந்தது அவர்களின் தந்தை. ராஜேந்திர சோழர் ஆட்சியில் கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனைதான். அதனாலேயே இப்படி தந்தை வழக்கைக் கொண்டுவந்ததில் அவர்களது தாயாருக்கு உடன்பாடில்லை என்பது கிராமத்து மகாஜனங்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்தது. நடந்தது நடந்துவிட்டதுஇருக்கின்ற ஒரு மகனையாவது காப்பாற்றலாம் என்று அவள் நினைத்தாள் போலும். 

செல்லாத்தா சொன்னது  தாழிக்கோனன் மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. இன்னிக்கு வழக்குல ஏதாவது ஏறுமாறா நடந்து இந்த மகனும் இல்லைன்னு ஆச்சுஅப்புறம் என்னை உயிரோட பாக்க முடியாது” என்று அழுதாள் செல்லாத்தா. ஆனாலும்   கோனனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சிறிய வயதிலிருந்தே இருவரையும் கண்டித்து வளர்க்காதது இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று நினைத்தார் அவர். .மூத்தது மோழை இளையது காளை என்ற பழமொழிக்கு ஏற்றார்போலவே இரு மகன்களும் அவருக்கு அமைந்து விட்டனர்.  ஆதி முதலே இருவருக்கும் சண்டைதான். சிறு பிள்ளைச் சண்டைபோகப்போகச் சரியாகிவிடும் என்று விட்டது பெரும் தவறு என்பதை அவர் இப்போது உணர்ந்தார். மூத்தவன் கொஞ்சம் அப்பாவி என்ற எண்ணம் அவருக்கு உண்டுஅதனால் அவன் மீது கொஞ்சம் பாசம் அதிகமாக வைத்துவிட்டார். இதனால் சின்னவனுக்கும் அவருக்கும் மனத்தாங்கல் கூட இருந்தது. 

அன்று வயலில் ஏற்பட்டது ஏதோ சிறு தகராறு தான். வழக்கம்போல சின்னவனுக்கு முன்கோபம் அதிகமாகி மூத்தவனின் முகத்திற்கு நின்று கூச்சலிட்டான். இதை வரப்பு ஓரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த  கோனன் வாய்த்தகராறோடு முடிந்துவிடும் என்றுதான் நினைத்தார். ஆனால் நடந்தது வேறு. எந்நாளும் இல்லாமல்மூத்தவனுக்கும் கோபம் அதிகமாக வந்துவிட்டதுதம்பியை நெஞ்சில் கைவைத்துத் தள்ளிவிட்டான். சாதாரணமாக அதை சமாளித்திருக்கக்கூடிய சின்னவனோமுதல் நாள் பெய்த மழையில் ஈரமாக இருந்த வயலில் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டான். அதனால் அடிபட்ட வலி ஒருபுறம்பக்கத்து வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் அவனைப் பார்த்துச் சிரித்தது ஒரு புறம் என்று அவனது கோபம் கட்டுக்கடங்காது போய்விட்டது. கையை ஊனி மேலே எழுந்தவன் பெரியவனை எட்டி உதைத்தான்அதனால் பின்னால் சாய்ந்த அண்ணனின் தலை அங்கிருந்த கல்லில் பட அந்தக் கணமே அவன் உயிர் பிரிந்துவிட்டது. கண நேரத்தில் நடந்துவிட்ட இந்த நிகழ்வைப் பார்த்த  தாழிக்கோனனின் ஆத்திரம் அடங்கவில்லை. சின்னவனை அங்கேயே வெட்டிப்போட்டிருப்பான். நல்ல வேளையாக பக்கத்தில் இருந்த ஆட்கள் தடுத்துவிட்டனர். இதோஅவனே தன் மகன் மீது பிராது கொடுத்து வழக்கும் வந்துவிட்டது. 

செல்லாத்தாவுக்கு மூத்த மகன் போன அதிர்ச்சியும் சோகமும் ஒரு புறம்இளையவனை தகப்பனே நடுச்சபையில் கொண்டுவந்து தண்டனை வாங்கிக் கொடுக்கத் துடிப்பது ஒருபுறம் என்று ஏகப்பட்ட இடிகள். அதனால் படுத்த படுக்கையாகி அழுதுகொண்டே இருந்தாள். இருக்கிற ஒரு மகனையும் பலி கொடுத்துவிட்டு அப்புறம் என்னதான் வாழ்க்கை என்று புலம்பித் தள்ளினாள். ஆனாலும் கோனன் அசைந்து கொடுக்கவில்லை. இது வேண்டுமென்று செய்யப்பட்ட செயலல்ல என்று அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் இளையவன் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். தான் தர்மத்தின் படி செயல்படுவதாக அதற்குக் காரணமும் கற்பித்துக்கொண்டார். மூத்தவனின் மீது அவர் கொண்ட பாசம் தான் இதற்குக் காரணம் என்று அவரது மனம் ஒரு ஓரத்தில் சொல்லிக்கொண்டு இருந்ததையும் அவர் சட்டை செய்யவில்லை. 
  
சபைத்தலைவரான பெரிய காராளர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். 

நீதானே இந்த வழக்கைக் கொண்டுவந்தது

ஆமாங்க

வயக்காட்டில் என்னய்யா நடந்தது? ”

இதோ இருக்கானே என் சின்ன மகன் சங்கரத்தடியான்அவனுக்கும் என் மூத்த மகனுக்கும் சண்டை. தம்பியை தமையன் அடிச்சான். அப்புறம் தம்பி அண்ணனை அடிச்சதில் அண்ணன் இறந்து பட்டான்

காராளர் கூட்டத்தில் இருந்த குடியானவர்களைப் பார்த்தார். அவர்களும் தலையசைத்து ஆமோதித்தனர்.   

அப்போ இது வேணும்னோமுன் விரோதம் காரணமாகவோ நடந்தது இல்லை?”

ஆமாங்கஇருந்தாலும் கொலை கொலைதானே

காராளர் பெருமூச்சு விட்டார்சிக்கலான வழக்காக அல்லவா இருக்கிறது

நீதிபதிகளில் ஒருவரான குராப்பாக்கம் கேசவபடியன் பேச ஆரம்பித்தார்

உனக்கு வேறு வாரிசு இருக்கிறதா?”

இல்லைஇவனுங்க இரண்டு பேர்தான்

வருமானம்சொத்து ?”

ஏதும் இல்லைங்க

அதன்பின் நீதிபதிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்

“இது கொலை வழக்குதான் ஆனால் இளையவனுக்கு மரணதண்டனை கொடுத்தால் ஒரு குடியே கெட்டுப் போய்விடும். வயதான தாய்தகப்பனைக் காப்பாற்றவும் யாரும் இல்லை. அவர்களுக்கென்று வேறு சொத்துகளும் இல்லை. ஆகவேஇளையவனான சங்கரத்தடியான்நம்ம ஊர் தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவிலில் நந்தா விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தாய் தந்தையை ஆயுள் பரியந்தம் வைத்துப் பராமரிக்கவேண்டும். இதுவே எங்கள் தீர்ப்பு.”

பெரிய காராளர் சொல்லி முடித்ததும் கூட்டத்தில் பெரும் கரகோஷம்எங்கேயோ இருந்து ஓடி வந்த செல்லாத்தா இளையவனைக் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தாள்.                                                ******************************இது இரண்டாம் ராஜேந்திர சோழர் காலத்தில் நடந்த உண்மைச்சம்பவம். தாமரைப்பாக்கம் கோவில் கல்வெட்டில் இது தொடர்பான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன 

தருப்பேறுடையான் தாழிகோனன் வந்து என் மகன் சங்கரத்தடியளும் என் மகன் பெரியானும் சூடுப்படுக்கிறிடத்து தம்பியை தமையன் அரிசப்பட்டு அடித்தான். அடிக்கதம்பியும் தமையனையெதிரேயடித்தான். தம்பியடிப்பிச்ச அடியிலே தமையன் பட்டான். என்று வந்து சொல்ல உனக்கு இவ்விருவருமல்லாது மக்களுள்ளரோ வென்று கேட்க மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயுநானுமேயுள்ளோமென்று சொன்னான். சொல்ல அர்த்தந்தானுண்டோ வென்று கேட்க அர்த்தமுமில்லை என்றான். என்ன ஒருகுடி கேடானமையிலும் இவர்களை ரக்ஷிப்பாரிலாமையாலும் அர்த்தம் இலாமையிலுந் திருத்தாமரைப்பாக்கத்து திருவக்னீஸ்வரமுடைய மஹாதேவர்க்கு திருனந்தாவிளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமைப்பனையும் ரக்ஷிப்பானாக. தம்ம நோக்க இவனிதற்கு படவேண்டா வென்று பெருக்காளர் விடுத்தமையில்..Comments

 1. Well written... With the language of that period. Looks like research done on stone edicts and inscriptions.

  ஆஹா எவ்வளவு உண்மை
  சிறிய வயதிலிருந்தே இருவரையும் கண்டித்து வளர்க்காதது இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று நினைத்தார் அவர்

  ReplyDelete
 2. கொலை என்ற கொடும் செயலை செய்தபோதினும் சமூக அக்கறையோடு வயதான காலத்தில் தாய்தந்தையரைப் பேணிக் காக்க வேண்டிய கடமைக்காக சங்கரத்தடியானுக்கு மரண தண்டனை தவிர்த்து ஆறிவுரைத் தீர்வு சொன்ன காராளர் மிக உயர்ந்து நிற்கிறார். இதுவே தமிழ்ப்பண்பாடு. அருமையான பதிவு. மிக்க நன்றி திரு கிருஷ்ணன் அவர்களே!

  ReplyDelete
 3. அருமையாக இருந்தது. இது போன்ற கல்வெட்டுகள் நம் வரலாற்றுப் பாடங்களில் வந்தால் சிறப்பாக இருக்கும்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எது தமிழ்ப் புத்தாண்டு 2.0

புத்தாண்டு என்பது ஒரு  மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை.  மிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல சொற

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம