Skip to main content

Posts

Showing posts from October, 2016

சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2 அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3 தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4 பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5 பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுத

சரஸ்வதி துதி - பாரதியார்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள், உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள், கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள்  1 மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழழையில் உள்ளாள், கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவுச் சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்  2 வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள், வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம்.   3 தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம், உய்வ மென்ற கருத்திடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம், செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம், கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம், கவிஞர் தெய்வம்

சரஸ்வதி அந்தாதி - கம்பர்

காப்புச் செய்யுள்  ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்  ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய  உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே  இருப்பள் இங்கு வாராது இடர்.  படிக நிறமும் பவளச் செவ்வாயும்  கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடியிடையும்  அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்  கல்லும் சொல்லாதோ கவி.    நூல்-  கலித்துறை  சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல்  தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல்  பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்  வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1  வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல்  சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே  பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால்  உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2  உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லர் மெண்ணில் உன்னையன்றித்  தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை  வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே  விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3  இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு  முய