Skip to main content

Posts

Showing posts from April, 2022

தமிழ் அணங்கு என்னும் அபத்தம்

தமிழ்த்தாயை அணங்காகச் சித்தரிக்கும் படம் ஒன்றை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் . தமிழைப் பற்றிய புரிதல் கொஞ்சம் கூட இல்லாத சித்தரித்தல் அது . இதில் பாரதி பாரதமாதாவை சினம் கொண்டவளாகப் பாடியதால் , ஏன் தமிழ்த்தாயும் அப்படி இருக்கக்கூடாது என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் .  நம்முடைய மரபில் ஒவ்வொரு உருவகத்திற்கும் அதற்கான காரணம் உண்டு . பாரதமாதா சினம் கொண்டது , தான் அடிமைத்தளையில் சிக்கித்தவிக்கும் போது தம்முடைய புதல்வர்கள் அதிலிருந்து தன்னை விடுவிக்க முடியாத கோழைகளாக இருக்கின்றார்களே என்பதன் காரணமாக ( பாரதியின் பார்வையில் ). சாந்தமே உருவான அன்னை காளி உருக்கொண்டது தீயவற்றை அழிப்பதற்கு . சாதாரணமாக நாமே கோபத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும் . எடுத்ததெற்கெல்லாம் காரணமில்லாமல் கோபப்பட்டால் வீட்டில் உள்ளவர்களே ‘ ஒரு மாதிரி ’ பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் . தமிழன்னைக்குக் கோபம் கொள்ள இப்போது எந்தக் காரணமும் இல்லை . அப்படியே கோபம் அடைந்தாலும் தலைவிரி கோலமாக வெள்ளை ஆடை உடுத்தெல்லாம் கோபமடையமாட்டாள் . அது தமிழ் மரபில் அமங