Skip to main content

Posts

Showing posts from June, 2016

வாரசூலை

ஜோதிட சாஸ்திரத்தில் சூலம், சூலை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு இருக்கிறது. பயணம் செய்யும்போது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்யும்போது சூலம் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சூலம் என்றால் என்ன? எப்படி இதை அறிந்து கொள்வது ? வார நாட்கள் ஏழிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்தது. ஞாயிறன்று சூரியன், திங்களன்று சந்திரன் என்று அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய கோள்களின் ஆதிக்கம் அதிகம்.   பன்னிரண்டு ராசிகளில்,  இந்தக் கோள்கள் ஒவ்வொன்றிற்கும் உச்ச ராசி, அதாவது அதன் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ராசி என்று ஒன்று உண்டு. அதேபோல, நீச்ச ராசி அதாவது கோள்களின் சக்தி குறைவாக இருக்கக்கூடிய ராசி வீடுகளும் உண்டு.  இப்போ நாம் நமது வீட்டில் 'பவர்புல்லாகவும்'  மாமியார் வீட்டில் கப்சிப்பென்றும் இருப்பது போல (பெண்ணியவாதிகள் மன்னிக்க).  இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட திசையின் ஆதிக்கமும் உண்டு.   இந்தத் தகவல்களை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம். இதிலிருந்து ஒவ்வொரு கோளுக்கும் எந்த திசையில் சக்தி அதிகம் என்றும் எந்த திசையில் சக்தி