Skip to main content

Posts

Showing posts from October, 2021

The Timeline of Silappadhikaram and the date of Madurai burning

The Tamil Epic Silappadhikaram is a very important literary work as it provides an overview of the ancient Tamil society under the three major  kingdoms,  Cheras,  Cholas   and  Pandyas. It does so  by brilliantly interweaving the  story  of a merchant couple, Kovalan and Kannagi in the form of a dance drama. For the uninitiated, a brief outline of the story is given below & others can skip a para :)  The  story  starts with the marriage of Kovalan, son of a wealthy businessman in the Chola country, with Kannagi who hails from another wealthy merchant family. They start their life in the port city of Poompuhar. However, their marriage runs into trouble as Kovalan  was  attracted  by  a dancer named Madhavi.    Even that relationship didn’t last longer. Kovalan and Madhavi  separate after a brief period of 'living together'.  Kovalan comes back and starts living with Kannagi again.   Subsequently, both of them travel to  Madurai  in Pandya  country  to start a new life. Unfo

சிலப்பதிகாரத்தின் காலமும் மதுரை எரிக்கப்பட்ட நாளும்

ஒரு சிறு முன்னுரை  இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் எதிராஜன், சிலப்பதிகாரம் பற்றிய என்னுடைய பழைய ட்வீட் ஒன்றைக் குறிப்பிட்டு அது நடந்த காலம் என்னவென்று கண்டுபிடித்துவிட்டீர்களா என்று கேட்டிருந்தார். சிலம்பில் இடம்பெற்ற வானியல் குறிப்பு பற்றிய ட்வீட் அது. அதற்கான நல்ல astronomy software ஒன்று வேண்டும் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். நேற்று மதிப்பிற்குரிய ஜோதிடர் நரசிம்ம ராவ் அவர்கள் தன்னுடைய ஜெகந்நாத ஹோரா செயலியைக் குறிப்பிட்டு ட்வீட் ஒன்று போட்டிருந்தார். அதில் சூரிய சித்தாந்தத்தை வைத்து மகாபாரத காலத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள் என்றும் அது தவறான முறை என்றும் தெரிவித்திருந்தார். தவிர பொயுமு 12899லிருந்து அந்த செயலியைப் பயன்படுத்தி திருக்கணித முறையில் கிரக நிலைகளை அறியலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்தது சிலம்பைப் பற்றிய ஆய்வில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஜெகந்நாத ஹோரா செயலியையும் அந்த வானியல் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஆய்வு செய்தேன். அதன் விளைவே இந்தக் கட்டுரை.  சிலப்பதிகாரத்தின் காலம்  தமிழ் கூறும் நல்லுலகிற்கே உரிய வழக

ஆசீவகத் திரிபுகள்

ஒரு டிவிட்டர் விவாதத்தின் போது நண்பர் ஒருவர் இந்தப் பக்கத்தை தமிழகத்தின் தொல்மதம் ஆசீவகம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டினார். அதாவது ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசர் தமிழ்நாட்டுக்காரராம். இதை எழுதியவர் பெரும் ஆராய்ச்சியாளராம். விக்கி பக்கங்களிலெல்லாம் இதைச் சுட்டுகிறார்களாம். அந்தப் பக்கம் கீழே  சரி அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று பார்த்தால், அவருக்கு ஒரு புறநானூறு பாடல் கிடைத்திருக்கிறது. அதில் அறப்பெயர்ச் சாத்தன் என்ற கொடையாளியின் பெயர் கிடைக்கிறது. அவர் பிடவூரைச் சேர்ந்தவர். அடுத்து தற்போது திருப்பட்டூர் என்று வழங்கப்படும் பிடவூரில் ஒரு ஐயனார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான். இரண்டுக்கும் சேர்ந்து முடிச்சுப்போட்டு அந்த அறப்பெயர்ச் சாத்தன்தான் இந்த ஐயனார். அவரே மற்கலி கோசர் என்று ஒரே போடாகப் போடுகிறார். இதில் இரண்டு மூன்று கல்வெட்டுகளையும் காட்டுகிறார்.  இதைக் கொஞ்சம் ஆராயலாமே என்று புகுந்தால், அவர் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் 395ஐ எழுதியவர் நக்கீரர். சங்க காலத்துப் புலவரான நக்கீரர் நெடுநல்வாடையையும் திருமுருகாற்றுப் படையையும் எழுதியவர். தலையாலங்கானத்துச் செருவென