இன்று வடநாட்டில் அனுமனின் ஜயந்தி உற்சவம் . இந்நன்னாளில் அனுமனது பராக்கிரமத்தில் ஒன்றான சஞ்சீவி மலையைக் கொண்டுவந்தது பற்றி எழுதுவது பொருத்தமானது அல்லவா . (முதலில் ஒரு குறிப்பு . சஞ்சீவி மலை எங்கிருந்தது என்பது பற்றிப் பல தியரிகள் உண்டு . நான் கம்பனில் இருந்து , பெரியவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதியிருக்கிறேன் . இது தவறு , சஞ்சீவி மலை என் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளித்தான் இருந்தது என்று சொல்பவர்கள் தயை கூர்ந்து கடந்து செல்லவும் .) ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்த மருந்து மலைப் படலம் வருகிறது . இந்திரஜித்தால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டு வானரசேனைகள் அனைத்தும் வீழ்கின்றன . லக்ஷ்மணனும் அயர்ந்து வீழ்ந்துவிடுகிறான் . அப்போது போர்க்களத்தில் இல்லாதவர்கள் ராமனும் விபீஷணனும் . பின்னால் போர்க்களத்திற்கு வந்த ராமன், அனுமன் உட்பட அனைவருக்கும் நேர்ந்த கதியைப் பார்த்து திடுக்கிடுகிறான் . மூர்ச்சையடைந்து வீழ்கிறான் . இப்போது விபீஷணனும் அங்கே வந்து சேருகிறான் . அவனுக்கும் அதிர்ச்சி . இது பிரம்மாஸ்திரத்தால் வந்