இன்று நண்பரொருவர் பகிர்ந்த, மதுரையில் வைகை நதியில் புதுப்புனல் வரும் படத்தை ட்விட்டரில் போட்டு அதனுடன் சங்க இலக்கியமான பரிபாடலின் ஒரு சில வரிகளையும் கொடுத்திருந்தேன். என்னதான் பாரதத்திலிருந்து தமிழகத்தையும் தமிழர்களையும் தனித்துக்காட்ட ஒரு கும்பல் கூச்சல் போட்டுக் குதித்தாலும், பாரதப் பண்பாட்டின், கலாச்சாரத்தின் ஒரு பகுதியே தமிழகம் என்பதை நிறுவும் பல சங்க இலக்கியப் பாடல்களுள் இதுவும் ஒன்று என்பதால் கொஞ்சம் விரிவாகவே அதைப் பார்க்கலாம். முதலில் இந்தப் பாடல். பரிபாடல்(கள்) வரிசையில் பதினொன்றாவது. பரிபாடலில் பாட்டுடைப் பொருளாக முருகன், திருமால், வைகை ஆகியவற்றை வைத்துப் பல புலவர்கள் பாடியது நமக்குத் தெரியும். அந்த வகையில் இது வையையைப் போற்றும் பாடல். பாடியவர் நல்லந்துவனார். விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப, எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து, தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர, வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின் இல்லத்