Skip to main content

Posts

Showing posts from September, 2020

ராஜராஜரின் மெய்க்கீர்த்தி - புதிய தகவல்கள்

முதலில் ராஜராஜரின் மெய்க்கீர்த்தியைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையை  இங்கே  படித்துவிடுங்கள். சிறிய மெய்க்கீர்த்திதான். ஆனால் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல, ராஜராஜர் பெற்ற பெருவெற்றிகளைப் பட்டியலிடுகிறது இது.  இப்படி வெற்றிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ராஜராஜரின் ஆரம்பப் போர்களைப் பற்றி குழப்பமே நிலவுகிறது. அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதைப் போல ஆரம்ப வரியில் உள்ள காந்தளூர்ச்சாலை எது என்பதைப் பற்றிய சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை.  ராஜராஜரின் வெற்றிகளைக் குறிப்பிடும் இன்னொரு முக்கிய ஆவணமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளோ இந்தக் காந்தளூர்ச்சாலையைப் பற்றிக் கூறாமல் பாண்டியன் அமரபுஜங்கனுக்கு எதிராக அவர் அடைந்த வெற்றியோடு ராஜராஜனின் திக்விஜயத்தை ஆரம்பிக்கிறது.  இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அண்மையில் நான் வாசித்த கல்வெட்டு ஒன்று ராஜராஜரின் மெய்க்கீர்த்தியைப் பற்றிய புதிய தகவல் ஒன்றை அளித்தது. கல்வெட்டு என்னவோ புதிதல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியகுளம் என்று ஒரு ஏரி உண்டு. இரண்டு பருவமழைக்காலங்களிலும் மழைப்பொழிவு உள்ள இந்த மாவட்டத்தில், இந்த ஏரி அடிக்கட

கிண்ணிமங்கலம் தெரிவிக்கும் வரலாற்றுச் செய்திகள்

கீழடியை விட கிண்ணிமங்கல ஆய்வுகள் முக்கியமானது, அது புதிய வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தப்போகிறது என்று பலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அது இப்போது உண்மையாகிவிட்டது (அது அவர்கள் நினைத்தபடிதானா என்பது வேறு விஷயம்). என்ன மாதிரியான செய்திகள் இப்போது வெளிவந்திருக்கின்றன என்பதை ஒரு பறவைப் பார்வையாகப் பார்ப்போம்.  முதலில் கிண்ணிமங்கலம். மதுரைக்கு அருகே, உசிலம்பட்டி சாலையில் வடபழஞ்சியை அடுத்து உள்ள கிராமம் இது. இந்த கிராமத்தில் ஏகநாத சுவாமியின் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஜூலை மாதம் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு துண்டுக் கல் தூணும் சில பொருட்களும் கிடைத்தன. அந்தத் துண்டுக் கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களில் "எகன் ஆதன் கோட்டம்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுக் கல்வெட்டு இந்தப் படத்தில் உள்ளது. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், தமிழ் பிராமி எழுத்துகளில் 'எ' என்ற எழுத்து |> போன்று முக்கோணத்தைத் திருப்பி வைத்தது போல இருக்கும். இதன் நடுவே ஒரு புள்ளி வைத்துவிட்டால் அது 'ஏ'காரமாக ஆகிவிடும். காலப்போக்கில் இந்தப் புள்ளி