குஸ்ரூ கான் டெல்லி சென்றதும் நடந்தவை, கிட்டத்தட்ட மாலிக்கபூர் டெல்லி சென்றதும் நடந்ததைப் போலவே, ஒரு ஆக்ஷன் ரீப்ளேயாக, இருந்தது. தனது எஜமானனான முபாரக்கை தந்திரமாக வீழ்த்திவிட்டு தான் மன்னனாக முடிசூட்டிக்கொண்டான் குஸ்ரூ கான். ஆனால் இது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. காஸி மாலிக் என்பவன் குஸ்ரூவை வீழ்த்திவிட்டு தானே சுல்தான் என்று பிரகடனம் செய்துகொண்டான். கியாசுதீன் துக்ளக் என்ற பெயருடன் டெல்லியில் துக்ளக் வம்சத்தை ஸ்தபித்தான். தொடர்ந்த குழப்பங்களால் சீர்கெட்டிருந்த டெல்லி நிர்வாகத்தைச் சீரமைக்கத்தொடங்கிய கியாசுதீன், தன் மகனான உலூக் கானை அடுத்த வாரிசாக அறிவித்தான். இந்த உலூக் கான் தான் பின்னாளில் 'பிரசித்தி பெற்ற' முகமது பின் துக்ளக். வாரிசாக நியமிக்கப்பட்ட உலூக்கானின் பார்வை முதலில் தக்காணத்தின்பால் திரும்பியது. காகதீயர்கள் போர்க்கொடி தூக்கியதால் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்த உலூக்கான் முதலில் தோல்வியையே சந்தித்தான். தேவகிரிக்குப் பின்வாங்கி, பிறகு மீண்டும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாரங்கல்லின் மீது படையெடுத்து, காகதீயர்களைத் தோற்கடித்தான். 'மாபாரின்' செல்வங்க