முதலில் ஒரு டிஸ்கி. தமிழகத்தில் ஆட்சி செய்த பாண்டிய வம்சம் எப்படி முடிவுக்கு வந்தது? அதற்குக் காரணம் விஜயநகர நாயக்கர்களா அல்லது வேறு யாராவதா? இந்தக் கேள்விகள் தொடர்பாக ஒரு விவாதம் நடந்தது. அது தொடர்பாக நான் சொல்லியிருந்த கருத்துகளுக்கான தரவுகளை அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதால் மட்டுமே இந்தப் பதிவு. மற்றபடி, இந்த விவாதத்தைத் தொடர எனக்கு நேரமும் விருப்பமும் இல்லை. முடத்திருமாறனால் தோற்றுவிக்கப்பட்ட மதுரைப் பாண்டியர் வம்சம் எப்படி மதுரையிலிருந்து அகற்றப்பட்டது என்பதைப் பற்றி இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. பொயு 13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய சகோதரர்களுக்குள் தாயாதிச்சண்டை மூண்டதும், அதன் விளைவாக மாலிக்கபூர் மதுரைமீது படையெடுத்ததும் தெரிந்த விஷயம். நிலைகுலைந்த மதுரையை மீட்டெடுத்து ஆட்சி செய்ய முனைந்த அவர்களின் உறவினனான பராக்கிரம பாண்டியன், உலூக் கான் என்ற முகமது பின் துக்ளக்கால் பிடிபட்டுக் கொலை செய்யப்பட்ட பின் மதுரைப் பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது. மதுரையும் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் சுல்தான்களால் ஆட்சி செய்யப்பட்டு இருளில் முழ்கியது. பின் குமார கம்பண்ணர், மீ