பழங்காலத்தில் புலமைத்திறனைச் சோதிக்க ஈற்றடியைக் கொடுத்து அதற்கான பாடலை எழுதச்சொல்லும் வழக்கம் இருந்தது. பாரதியாரைக் கூட 'பாரதி சின்னப்பயல்' என்ற ஈற்றடியைக் கொடுத்து எழுதச்சொல்லி ஒருவர் வாங்கிக்கட்டிக்கொண்ட வரலாற்றைப் படித்திருக்கிறோம் அல்லவா. அதன்படியே, இதுபோன்று ஈற்றடிகளைக் கொடுத்து புலமை விளையாட்டில் ஈடுபடுவதில் போஜராஜனுக்கு மிகவும் விருப்பமுண்டு. அவன் அரசவையில் காளிதாஸனில் இருந்து பல கவிராஜ சிம்மங்கள் இருந்ததால் அவர்களும் அரசனுக்கு ஈடுகொடுத்து பாடல்கள் இயற்றிவந்தனர். ஒருநாள் இரவு நகர்ச்சோதனை முடிந்து அதிகாலை நேரத்தில் போஜன் அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு குருகுலம், மாணவர்கள் சமஸ்கிருத ககர வரிசைப் பாடத்தை மனனம் செய்துகொண்டிருந்தனர். 'க(1), க(2), க(3), க(4)' என்று தாளக்கட்டோடு அவர்கள் உருப்போட்டது அரசனின் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அன்று அரசவையில் தன் மனதில் ஒலித்துக்கொண்டிருந்த 'க(1), க(2), க(3), க(4)' வையே ஈற்றடியாகக் கொடுத்து அதற்கான பாடல் ஒன்றை இயற்றுமாறு புலவர்களைக் கேட்டுக்கொண்டான் போஜராஜன். புலவர்கள் முகத்தில் ஈயாடவில்லை