Skip to main content

Posts

Showing posts from May, 2016

அக்னி நட்சத்திரம்

கொளுத்தும் கோடையின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது . கத்தரி வெய்யில் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் காலம் வருடத்தில் வெப்பம் மிக அதிகமாக உணரப்படும் நாட்களைக் கொண்டது . இந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்கள் வெளிவட்டார நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு கோடைக்கே உரிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டால் வெயிலின் கொடுமையிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் .  கோடையின் இந்தக் கடுமையான பகுதியை கணித்து மக்கள் தங்களை அதனிலிருந்து தற்காத்துக்கொள்ளவே நம் முன்னோர்கள் அக்னி நட்சத்திரத்தை ஒரு வானிலை முன்னறிவிப்பாகப் பயன்படுத்தினார்கள் . பொது வழக்கில்,   ' சித்திரை பின் ஏழு வைகாசி முன் ஏழு ’  என்று சொன்னாலும்  உண்மையில்  கத்தரி வெயில் இந்தக் கணக்குக்கு பொருந்தி வருவதில்லை . இந்த வருடத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்,    சித்திரை 21 ம் தேதியே அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது .  சரி, இது எப்படிக் கணக்கிடப்படுகிறது. இதற்கு ஏன் அக்னி நட்சத்திரம் என்ற பெயர் வந்தது?  அதைப் பார்ப்பதற்கு முன்னாள் சற்று வானியல், இதெல்லாம் எங்களுக்குத்