பழங்காலத்தில் மன்னர்களும் / அவர்களுடைய உறவினர்களும் / அரசு அதிகாரிகளும் கோவில்களுக்குத் திருப்பணிகள் பல செய்தனர். அவைகளை கல்வெட்டுகளிலும் பொறித்துவைத்தனர். இப்போது நமக்கு கிடைக்கும் பெரும்பாலான வரலாற்றுச் செய்திகள் இத்தகைய கல்வெட்டுகளால் அறியப்படுவனவையே. அப்படி அவர்கள் கோவில்களுக்கு அளித்த கொடைகளில் முக்கியமானது நுந்தா விளக்குத் திருப்பணி. இறைவனது கருவறைகளில் இருக்கும் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது மரபு. அப்படி கருவறைகளில் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும் விளக்கு தான் நுந்தா விளக்கு. இதை தூண்டாமணி (தூண்ட வேண்டியிராத) விளக்கு என்றும் அழைப்பர். கீழே படத்தில் இருக்கும் இந்த விளக்கின் மேற்பாகம் குடுவை போல இருப்பதைக் கவனியுங்கள். அதில் நெய் நிரப்பப்பட்டு விளக்கில் சொட்டி விளக்கை எரிய வைக்கும். இந்த விளக்குக்குத் தேவையான நெய்யை நன்கொடையாக வழங்கத்தான் அக்காலத்தில் சாவாமூவாப் பேராடு என்ற கட்டளையை ஏற்படுத்தினர். கோவிலுக்கு சாசனமாக வழங்கப்பட்ட இத்தகைய ஒரு நன்கொடையை கீழே உள்ள கல்வெட்டு வாசகங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம் ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரிப