(இணையத்தில் நான் எழுதிய ஆரம்ப காலக் கட்டுரைகளின் ஒன்று இது. இந்த ப்ளாகை ஆரம்பித்ததும் மீண்டும் 2016ல் இதை எழுதினேன். ஆனால் இன்னும் இதைப் பற்றிய குழப்பங்கள் நிலவுவதால் மீளுருவாக்கம் செய்திருக்கிறேன், சில கூடுதல் தகவல்களோடு) தமிழ்நாட்டில் விநாயகப் பெருமானின் வழிபாடு மிகத் தொன்மையானது. ஆனால் பல்லவ நரசிம்மனின் வாதாபிப் படையெடுப்புக்குப் பின், அவருடைய தளபதியான சிறுத்தொண்ட நாயனாரால் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டதுதான் பிள்ளையார் வழிபாடு என்று பரவலான ஒரு நம்பிக்கை இருந்தது. ‘வாதாபி கணபதிம்’ என்று தொடங்கும் தீட்சிதரின் பாடலும் இதற்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. அதேபோன்று தமிழ்நாட்டின் குடைவரைக் கோவில்களை, அதாவது பாறைகளை, மலைகளைக் குடைந்து கோவில்களை அமைக்கும் முறை, முதலில் அமைத்தது பல்லவர்கள் தான் என்று பெரும்பாலானோர் எழுதிக்கொண்டிருந்தார்கள். வரலாற்று ஆய்வுகளில் இது போன்ற மூட நம்பிக்கைகளை பல இடங்களில் காணலாம். ஆனால், இந்த இரண்டு கருத்துகளையும் மாற்றி அமைக்கும் ஆதாரம் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோவிலில் கிடைத்தது. அங்குள்ள தேசி விநாயகர் சன்னதியில் இந்தக் குடைவரைக் கோவிலை அமைத்து விநாய