Skip to main content

Posts

Showing posts from June, 2020

நீதி

அந்தச்சித்திரமேழிசபைஇதுபோன்றஒருவழக்கைச் சந்தித்ததேயில்லை. வாய்க்கால் வரப்புத் தகராறு, களவு போன்ற வழக்குகள் வருவது உண்டு.சில சமயம் அபூர்வமாக சொத்துத் தகராறுகள் கூட வரும். ஆனால் ஒரு கொலை வழக்கு, அதுவும் இப்படிப்பட்ட கொலை வழக்கை அது இப்போதுதான் சந்திக்கிறது. கொலை செய்யப்பட்டவன் அண்ணன், செய்தவன் தம்பி. வழக்கை மன்றத்துக்குக் கொண்டுவந்தது அவர்களின் தந்தை. ராஜேந்திர சோழர் ஆட்சியில் கொலைக்குற்றத்திற்கு மரண தண்டனைதான். அதனாலேயே இப்படி தந்தை வழக்கைக் கொண்டுவந்ததில் அவர்களது தாயாருக்கு உடன்பாடில்லை என்பது கிராமத்து மகாஜனங்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்தது. நடந்தது நடந்துவிட்டது, இருக்கின்ற ஒரு மகனையாவது காப்பாற்றலாம் என்று அவள் நினைத்தாள் போலும்.
செல்லாத்தா சொன்னதுதாழிக்கோனன் மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. “இன்னிக்கு வழக்குல ஏதாவது ஏறுமாறா நடந்து இந்த மகனும் இல்லைன்னு ஆச்சு, அப்புறம் என்னை உயிரோட பாக்க முடியாது” என்று அழுதாள் செல்லாத்தா. ஆனாலும்கோனனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சிறிய வயதிலிருந்தே இருவரையும் கண்டித்து வளர்க்காதது இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று நினைத்தார் அவ…