Sunday 31 January 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 3

தமிழ் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சியை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். இந்த மூன்று பிரிவையும் Stage I, Stage II  மற்றும் Stage III என்று அழைக்கிறார்கள். இந்த மூன்று பிரிவுகளுக்குள்ள வேறுபாடு அடிப்படையில் உயிரெழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவங்களில் உள்ளது.  உதாரணமாக 'ந' என்ற குறில் எழுத்து முதல்
முறையில் (Stage I)  கீழே உள்ளது போல எழுதப்படும்.

Tab1

இது ஒரு உயிர்மெய் எழுத்து என்பதைக் குறிக்க ஒரு சிறிய கோடு மேலே உள்ளதைக் கவனிக்கவும். இதுவே நா என்ற நெடிலாக எழுதப்படும்போது பக்கத்தில் ஒரு 'அ' சேர்க்கப்படும்
இரண்டாவது முறையில் 'ந்' என்ற மெய்யெழுத்துக்கும் 'ந' என்ற உயிர்மெய் எழுத்துக்கும் ஒரே வரி வடிவம்தான், கீழே உள்ளது போல.
Tab2
நா என்ற நெடிலை எழுதவேண்டுமானால் முதல் முறையில் பார்த்தது போல மேலே ஒரு சிறிய கோடு இடப்படும். இப்படி மெய்யெழுத்தையும் உயிர்மெய்யெழுத்தையும் ஒரே வரிவடிவத்தில் எழுதும் முறை அசோகரின் பிராமி (பிராகிருத) வடிவத்திலும் உண்டு. இதை ஆதாரமாக வைத்து தமிழ் பிராமி அசோகரின் பிராமி வரிவடிவத்துக்கு முற்பட்டது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சரி மூன்றாவது வடிவத்தில் என்ன வேறுபாடு. இது நாம் இப்போது தமிழை எழுதும் முறைப்படி, மெய்யெழுத்துக்களை வேறுபட்டுக் காண்பிக்க, ஒரு புள்ளியை அருகில் வைக்கும் வழக்கத்தைக் கொண்டது. உதாரணமாக ந் என்ற மெய்யெழுத்து இவ்வாறு எழுதப்படும்.
Tab3
எனவே தமிழ் பிராமி கல்வெட்டுக்களைப் படிப்பதற்கு முதலில் அவை எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று அறியவேண்டும். இல்லையெனில் எழுத்துக்கள் தவறான முறையில் படிக்கப்பட்டுவிடும்.
மேலும் ............

No comments:

Post a Comment