Sunday 31 January 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4

தமிழ் பிராமி எழுத்துக்கள் முதலில் மத சம்பந்தமான எழுத்துக்களுக்குப் பயன்பட்டன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. முக்கியமாக சமணர்களின் வாழிடங்களில் இவை அதிகம் காணப்படுவதால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தனர். பிற்காலத்தில் முதுமக்கள் தாழி, நடுகற்கள் போன்றவற்றிலும் இந்த வகை எழுத்துக்கள் காணப்படுவதல் பொதுப் பயன்பாட்டுக்கும் இந்த வகை எழுத்துக்கள் நாளடைவில் வந்திருக்க வேண்டும்.
இது தவிர  இன்னொரு  முக்கியமான செய்தி, வெளிநாடுகளிலும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது என்பதாகும். தாய்லாந்தில் ஒரு பானையில் து ர ஓ   என்ற எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. அது துரவன் என்ற சொல்லாக, ஒரு துறவியைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே எகிப்தில் செங்கடல் அருகே  உள்ள துறைமுக நகரமொன்றில் ஒரு பானையில் 'பானை உறி' என்று பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டன. தமிழர்களின் கடல் கடந்த பிரயாணங்களுக்கும் வணிகத்துக்கும் இவை சான்றாக விளங்குகின்றன.

No comments:

Post a Comment